உள்ளூர் சந்தையில் எரிவாயு பற்றாக்குறை இல்லை என்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் உள்நாட்டு சந்தை குறித்து மறுஆய்வு செய்யும் கலந்துரையாடலொன்று நேற்றுஅலரி மாளிகையில் நடைபெற்றது.
எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு சலுகை விலையில் வழங்குவதற்கான வழிகளைக் கண்டறிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு எரிவாயுக்களின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் கோருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை சுங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைத்திருந்த 3,000 மெட்ரிட் அரிசியை பொது மக்களுக்கு விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் திணைக்களம் சேமித்துள்ள அரிசியை பொதுமக்களின் பாவனைக்கு விநியோகிக்கவும், உள்ளூர் விவசாயிகளிடமிருந்து 25,000 மெட்ரிட் அரிசி வாங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.