25.4 C
Jaffna
January 1, 2025
Pagetamil
கிழக்கு

விடுதலைப் புலிகளின் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (14)மாலை மீட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம். கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

காரைதீவு கொம்புச்சந்திக்கருகாமையில் உள்ள வீடொன்றில் பொலிஸ் குழுவினர் தேடுதலை மேற்கொண்டு இந்த கைத்தூப்பாக்கி மற்றும் மகசின்களை மீட்டுள்ளனர்.

துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் 44 வயது மதிக்க தக்க மகாலிங்கசிவம் அசோக் என்ற வீட்டு உரிமையாளர் கைதாகியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கைதாகிய சந்தேக நபர் சிறிது காலம் தாதிய உத்தியோகத்தராக செயற்பட்டதுடன், கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாமிந்த ஹெட்டியாரச்சி புதிய பதவிக்கு நியமனம்

east tamil

Update: மீகமுவ பெண்ணின் சடலம் திருகோணமலையில்!

east tamil

வாழைச்சேனை கடற்பரப்பில் கரையொதுங்கிய மியன்மார் படகு

east tamil

மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம படகு

east tamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

Leave a Comment