யுகதனவி ஒப்பந்த பிரதிகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடுங்கள்!

Date:

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரதிகளை பாராளுமன்றத்தில் கையளிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்குமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் பிரதமர், பொது நிதி தொடர்பான ஒப்பந்தம் ஏன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் அமைச்சுக்களின் செலவுத் தலையீடுகள் குறித்து தினசரி விவாதம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த ஐ.தே.க தலைவர், ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்படுவதில் தாமதம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைப்பது வீண் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க, உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நிதியமைச்சின் செயலாளர் பிரதியமைச்சரிடம் கையளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சபாநாயகர் உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல, நாளைய தினம் பாராளுமன்றத்தில் பிரதியொன்றை கையளிக்க முடியும் என விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அரசாங்கத்தின் பிரதிநிதி அல்ல, பாராளுமன்றத்தின் பிரதிநிதி என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல, பொது நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது எனவும், சபாநாயகரின் பணிப்புரையின்மையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்