27.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
உலகம்

மேகன் நல்லவரில்லை: ட்ரம்ப்!

இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் நல்லவரில்லை என ஏற்கனவே சொன்னேன். இப்போது அதனை எல்லாருமே கண்கூடாக பார்க்கிறீர்கள் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து அமெரிக்க நடிகையும் ஹாரியின் மனைவியான மேகன் மெர்கல் கடந்த சில நாட்களுக்கு முன் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை தெரிவித்தபோது அவரை ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.

நான் மேகனுடைய ரசிகன் அல்ல எனக்கூறிய ட்ரம்ப், ஹாரிக்கு ஏராளமான அதிஷ்டம் கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

மேகன் மிகவும் மோசமானவர், அவர் நல்லவரில்லை. மேலும், ஒன்றுக்கும் உதவாதவர் என்ற பொருளில் meghan no good என ட்ரம்ப் கூறினார்.

2024 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மேகன் போட்டியிட விருப்பதாகவும், இதுகுறித்து பைடன் குழுவினருடன் ஆலோசனை நடத்திவருவதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடதக்கது.

பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்த இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல் தம்பதியினர் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர். மேகன் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெட் ப்ளூ விமானத்தில் அதிர்ச்சி – இரு சடலங்கள் மீட்பு

east tamil

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

Leave a Comment