தமிழ் திரையுலகில் கவர்ச்சியை மட்டும் நம்பாமல் நடிப்பு திறமை உள்ள நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’அங்காடித்தெரு’ ’தூங்காநகரம்’ ’கருங்காலி’ ’மங்காத்தா’ ’இறைவி’ உள்பட பல திரைப்படங்களில் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
அஞ்சலி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அஞ்சலி தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவு செய்து வருவார். அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.