இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசங்க குருசிங்க, 1996 கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஐந்து மூத்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தாய்மார்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
குருசிங்க தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள ஒரு தகவலில், ஐந்து முக்கிய வீரர்களும், அவர்களின் தாய்மாரின் துணையில்லாமல் இந்த சாதனையை அடைந்திருக்க மாட்டார்கள் என்று கூறினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அர்ஜுன ரனதுங்க, ஹஷன் திலகரத்ன, ரோஷன் மகாநாம, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது தாயார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
1996 கிரிக்கெட் உலகக் கோப்பையை இலங்கையணி வெற்றி பெற்ற 25 வது ஆண்டு நிறைவு இன்றாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1