அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக ஒமைக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவிலிருந்து சிட்னி சென்று சேர்ந்த 2 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்குக் ஒமைக்ரோன் தொற்று இருப்பது தெரியவந்தது.
இருவருக்கும் நோய் அறிகுறி இல்லை என்றும் அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நோய்த்தொற்று முடிவுக்கு வரவில்லை என்பதற்கு இது சான்று என நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் டொமினிக் பெர்ரோட்டெட் கூறினார்.
வைரஸ் தொற்றுச் சூழலில் வாழ்வதற்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டும். அத்துடன் புதிய வகைக் வைரஸிற்கு தயாராய் இருக்க வேண்டும் என்றார் அவர்.
தற்போதைக்கு பூஷ்டர் உள்ளிட்ட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது சிறந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரே விமானத்தில் வந்த தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மேலும் 12 பயணிகளுக்குக் வைரஸ் தொற்று இருக்கவில்லை. எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 260 பயணிகளிடமும் விமான ஊழியர்களிடமும் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது.




