ஓமிக்ரோன் கோவிட்-19 வைரஸ் பிறழ்வு அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பல ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களை தடை செய்ய அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சகம் எடுத்த முடிவை சுகாதார வல்லுனர்களின் தொழிற்சங்கங்கம் பாராட்டியுள்ளது.
எவ்வாறாயினும், எழுமாற்றான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்த பிறழ்வுநாட்டிற்குள் நுழைந்ததா என்பதை இலங்கை எவ்வாறு தீர்மானிக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் மரபணு பரிசோதனை செய்து வைரஸ் பிறழ்வை கண்டறிந்துள்ளதாகவும், எனவே சீரற்ற சோதனைகளை மேற்கொள்ளாத இலங்கை போன்ற நாடு, ஓமிக்ரோன் பிறழ்வுநுழைந்ததா என்பதை எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்றும் சுகாதார வல்லுனர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கேள்வியெழுப்பினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2