25.3 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

ஆளுங்கூட்டணி குழப்பம் நீடிக்கிறது: இன்றும் நாடாளுமன்றத்திற்குள் மோதல்!

ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணிக்குள் தோன்றியுள்ள மோதல் இன்றும் பாராளுமன்றத்தில் வெளிப்பட்டது. நேற்றைய நாளைப் போலவே, இன்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி- பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறி மாறி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை குறிவைத்து பெரமுன தரப்பினர் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் நேற்று தர்க்கப்பட்டனர்.

இன்று பெரமுன இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மைத்திரியை தாக்க, சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு பதிலடி கொடுத்தனர்.

ரொஷான் ரணசிங்க உரையாற்றிய போது,

“முன்னாள் ஜனாதிபதி இன்று என்னைப் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டார், நான் அவரிடம் சொல்கிறேன், நான் ஒரு கிசுகிசு அரசியல்வாதி அல்ல. அவருக்கு அந்தப் பழக்கங்கள் இருந்திருக்க வேண்டும்.

இயற்கை விவசாய தீர்மானம் அமைச்சரவையால்  எடுக்கப்பட்டது. ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்களும் இருந்தனர். இது ஜனாதிபதியால் மட்டும் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கூட்டாக எடுக்கப்பட்டது.

பொலன்னறுவையில் அவரது வேலைத்திட்டம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதனால்தான் அவர் இயற்கை உர பிரச்சனையை கையிலெடுத்துள்ளார்.
ஜனாதிபதி நல்ல முடிவை எடுத்துள்ளார். அந்த முடிவுடன் நாங்கள் நின்றோம்.
இதற்கு விவசாய சமூகமும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு 50 சதவீதம் பேர் சம்மதிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். மைத்திரி விவசாய சமூகத்தின் கருத்தை கிளறி அரசியல் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
நாங்கள் நடத்தும் கலவரம் ஒரு தனியான செயல் என்றும் கூறினார்.சஹாரானின் கலவரமும் அப்படித்தான் இருந்திருக்கும்.பிரச்சினை இல்லை என்றார்.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன:

இதைப் பற்றி மேலும் பேச வேண்டுமா என்ற கேள்வி உள்ளது. கேள்வியொன்று கேட்கப்படும் போது உரிய நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும்போதே கேட்க வேண்டும் என அவைத்தலைவர் நேற்று தெரிவித்தார். மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த போது இது குறித்து பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதை நான் கூற விரும்புகின்றேன். அப்போது அவர் அதற்கு பதில் அளிக்கலாம்.

இதைப் பற்றி தொடர்ந்து பேசினால், கட்சி என்ற ரீதியில் இதைப் பற்றி பேச வேண்டியிருக்கும்.

ரொஷான் ரணசிங்க:

சரியாகச் சொன்னால் முன்னாள் ஜனாதிபதி முப்பது வருடங்களாக இந்த பாராளுமன்றத்தில் இருந்துள்ளார். அவர் எவ்வளவு ஒழுக்கமற்றவர். நான் பாராளுமன்றத்தில் இல்லாத போது என்னை பற்றி பேசுங்கள்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி.

கட்சிக்குள் உள்ள பிரச்னைகளை தீர்க்க சொல்லுங்கள். எங்களால் இங்கே நேரத்தை வீணடிக்க முடியாது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்த விடயத்தில் ரணில், கோட்டா சிறப்பு: அனுர பாராட்டு!

Pagetamil

இந்தியர் என நினைத்து பிடித்த யாழ் ஐயரை விடுவிக்க இலஞ்சம்: வசமாக சிக்கிய அதிகாரி!

Pagetamil

மாணவி கடத்தல் விவகாரம்: அசமந்தமாக செயற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்!

Pagetamil

இந்திய தூதரிடம் வலைகளை வாங்கி தமது உறவினர்களுக்கு மட்டும் கொடுத்த மீனவ பிரதிநிதிகள்

east tamil

பெற்றா மலிவு விலை கலர் லைட்… தங்கத்துடன் கிளுகிளுப்பான கொழும்பு பயணத்தில் மாட்டிய அர்ச்சுனா: அனுராதபுரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

Pagetamil

Leave a Comment