தந்தையை குத்திக் கொன்று விட்டு தலைமறைவான மகன்!

Date:

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகிய மகனை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலிகுரூப் தோட்டத்தை சேர்ந்த  சரவணமுத்து மகாமுனி (71) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்று (15) இரவு 07.30 மணியளவில் தனது வீட்டில் மதுபோதையில் 42 வயதுடைய மகனுக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் போது மகன் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

கத்தி குத்துக்குள்ளான தந்தை அவ்விடத்திலேயே மரணமானார்.

சடலம் நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

மேலும் தலைமறைவான நபரை கைது செய்ய நாவலப்பிட்டி மற்றும் குருந்துவத்தை பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணையில் ஈடுபட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்