25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இந்தியா

‘பாலியல் சீண்டலால் சாகுற கடைசி பொண்ணு நானாத்தான் இருக்கணும்’: மேலும் ஒரு மாணவி தற்கொலை!

கரூரில் ‘பாலியல் அத்துமீறலால் சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கணும்’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு 12ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலணி பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். விட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பக்கத்து வீட்டு பாட்டி மாணவி நீண்ட நேரமாக வெளியில் வராததை கண்டு வீட்டினுள் சென்று பார்த்துள்ளார்.

மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதனை அடுத்து அவர் சிறுமியின் தாய்க்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வந்த பிறகு வெங்கமேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், பாலியல் சீண்டலால் சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கணும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில் வாழரதுக்கு ஆசைப்பட்டேன், ஆனா, இப்போ பாதியிலேயே போரேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை ஆனா முடியல…

ஐ லவ் அம்மா, சித்தப்பா, மணி மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும், ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன்… மன்னிச்சுருங்க என்றும், இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது என்றும், சாரி மச்சான் சாரி என குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் அடங்குவதற்கு முன்பாகவே கரூரில் ஒரு மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment