Pagetamil
சினிமா

பெற்றோரை அறைக்குள் அடைத்து வைத்து மிரட்டி நடிகைக்கு படவாய்ப்பு!

சாத்தியா படத்தில் நடிக்க மறுத்த ராணி முகர்ஜியின் பெற்றோரை, தயாரிப்பாளர் அறையில் வைத்து பூட்டிய தகவல் வெளியாகியுள்ளது.

அலைபாயுதே படத்தின் இந்தி ரீமேக்கான சாத்தியாவில் விவேக் ஓபராயும், ராணி முகர்ஜியும் நடித்திருந்தார்கள். மணிரத்னத்துடன் சேர்ந்து யஷ் சோப்ரா தயாரித்தார். அந்த படத்தில் நடிக்க முதலில் மறுப்பு தெரிவித்திருக்கிறார் ராணி.

இது குறித்து ராணி பேட்டி ஒன்றில் கூறியதாவது,

முஜ்சே தோஸ்தி கரோகே படத்திற்கு பிறகு வேலை இல்லாமல் 8 மாதங்கள் சும்மா இருந்தேன். என் கெரியர் முடிந்துவிட்டது, ராணி அவ்வளவு தான் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்தார்கள்.

அந்த நேரத்தில் தான் சாத்தியா பட வாய்ப்பு வந்தது. சாத்தியாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்க என் பெற்றோர் யஷ் சோப்ராவை சந்திக்க சென்றார்கள்.

யஷ் சோப்ராவோ தன் அறை கதவை பூட்டிவிட்டு எனக்கு போன் செய்தார். உன் பெற்றோரை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டேன். சாத்தியா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களை வெளியே விடுவேன் என்றார்.

அப்படித் தான் நான் சாத்தியாவில் நடித்தேன் என்றார்.

இதையும் படியுங்கள்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!