Pagetamil
இலங்கை

கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்: இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

நவீன கால தேவையை பூர்த்தி செய்வதற்கும் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கும் கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மாணவர்களை தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை நோக்கி செலுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்தார்.

தற்போது தற்போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மூன்று தடவைகள் சித்தியடையாத பட்சத்தில் மாத்திரமே ஒரு மாணவர் தொழிநுட்பக் கல்வியை நோக்கி செலுத்தப்படுகின்றார்.

மூன்று தடவைகள் O/L பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு மாணவர் ஏற்கனவே எந்தவொரு கல்வியிலும் ஆர்வமில்லாமல் இருப்பார் என்றும் எனவே அவர்களை தொழில்நுட்பக் கல்வி அல்லது தொழிற்பயிற்சியை நோக்கித் தள்ளுவது வீண் செயல் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

ஒரு மாணவன் ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் போதே தொழில் வழிகாட்டல் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் கூட்டாக இணைந்து முடிவெடுக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் எதிர்காலம் குறைக்கப்படக் கூடாது, எனவே மற்ற நாடுகளைப் போல நாட்டுக்கும் புதிய அமைப்பு தேவை என்றார்.

இலங்கையில் மனித மூலதனச் சுட்டெண் இல்லை என்றும், அது எத்தனை மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய நிபுணர்கள் தேவை என்பதை தீர்மானிக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவுகள்

east tamil

‘சிறைக்குள் வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை’: ஞானசாரரின் சோக்கதை!

Pagetamil

கோட்டாவின் மந்திரவாதி ஞானாக்காவுக்கு ரூ.280 மில்லியன் இழப்பீடு!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

Pagetamil

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!