திருமணமாகாத பெண்களின் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருப்பதில் இன்பம் அனுபவிக்கும் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சியம்பலகஹவத்தையை சேர்ந்த 27 வயதான இளைஞன், துறைமுக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
42 வயதான திருமணமாகாத பெண்ணின் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த நபர், பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். பெண் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்ததை தொடர்ந்து, அயலவர்கள் ஒன்றுகூடி சந்தேகநபரை பிடித்தனர்.
அவர் நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் ஏற்கனவே பலமுறை பெண்களின் கட்டிலுக்கு கீழே பதுங்கியிருந்து கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
2
+1
2
+1
1