தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவு எடுக்கும் முடிவுகள் அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வைத்தியர் சமந்த ஆனந்தா கூறுகையில், வி.ஐ.பி.க்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் உட்பட COVID-19 சுகாதார வழிகாட்டுதல்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் என்றார்.
விஐபிகளை வைரஸ் எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து நாட்டின் முடிவெடுப்பவர்களுக்கு வேறுபட்ட கருத்து இருக்கிறதா என்று கேள்வி எழுப்புபிய அவர்,
வைரஸ் தேர்ந்தெடுத்தவர்களை மட்டும் தொற்றுவதில்லை என்றார்.
வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் அனைவராலும் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்,
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளலாம். தொற்றுநோயியல் பிரிவில் வி.ஐ.பிகளுக்கு வெவ்வேறு சட்டங்கள் இருக்கக்கூடாது என வலியுறுத்தினார்.