கிளிநொச்சியில் கொதித்தெழுந்த சிவசேனை

Date:

கிளிநொச்சி பொலிஸார் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி
சிவ சேனா அமைப்பினர் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று
(13) மாலை இடம்பெற்றது.

கிளிநொச்சியில் அண்மையில் இந்து மதகுரு ஒருவர் மீது தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டு அவரது உருத்திராட்ச மாலை அறுத்தெறியப்பட்ட சம்பவம்
தொடர்பாக நீதி கோரி கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலய முன்பாக
கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது தேங்காய் உடைத்து தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில் அண்மைக்காலமாக ரவுடிகளின் செயற்பாடுகள் அதிகரித்து
காணப்படுகிறது என்றும் அவர்கள் மீது பொலீஸார் நடவடிக்கை எடுப்பதில்
அசமந்த போக்குடன் காணப்படுகின்றனர்.. எனவும் தெரிவித்த போராட்டக்காரர்கள்

தாக்கப்பட்டவர் நீதி கோரி பொலீஸ் நிலையம் சென்ற போது பொலீஸார் தாக்குதல்
மேற்கொண்டவருடன் சமரசத்துடன் செல்லுமாறு கோரியுள்ளமை வேதனையான விடயம்
எனவும் ஆர்ப்பாட்டத்தல் ஈடுப்ட்ட மதகுமார்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இன்றைய ராசி பலன் | 11.08.2026

## 🔮 இன்றைய ராசி பலன் | 11.08.2026 ♈ மேஷம்: புதிய...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்