கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி, நகர் பள்ளி, வைத்தியசாலை, டெலிகொம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும் எனவும்
தொடர்ந்து சனிக்கிழமை (13) கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படுவதுடன் திங்கட்கிழமை (15) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சின்னப்பாலமுனை மற்றும் கோணாவத்தை ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (16) சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மல்கம்பிட்டி வீதி, கல்லரைச்சல், மலையடிக்கிராமம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படுமென மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-பா.டிலான்-