மாயமான 3 சிறுமிகளும் வீடு திரும்பினர்!

Date:

கொழும்பு 12 இல் இருந்து திங்கட்கிழமை காணாமல் போன மூன்று சிறுமிகள் நேற்று (9) மாலை வீடு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

13- 15 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் கெசல்வத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொழும்பு 12 ஐச் சேர்ந்த சிறுமிகளான பாத்திமா ரக்ஸா (15), அவரது சகோதரி பாத்திமா கதேரா (13) மற்றும் கம்பளையைச் சேர்ந்த உறவினர் பாத்திமா வர்யா (13) ஆகியோர் திங்கட்கிழமை காலை வீட்டை விட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

சிறுமிகள் தாயின் கையடக்கத் தொலைபேசியையும் எடுத்துச் சென்றதாக எஸ்.எஸ்.பி தல்துவா தெரிவித்தார்.

சிறுமிகளைக் கண்டுபிடிப்பதற்காக கொழும்பு (மத்திய) குற்றப்பிரிவு மற்றும் கெசல்வத்தை காவல்துறையின் இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டதாக பேச்சாளர் கூறினார்.

குறித்த சிறுமிகள் அனுராதபுரத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் வீசப்படுமா ‘அனைத்து குண்டுகளின் தாய்’?: அமெரிக்கா தீவிர ஆலோசனை!

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் போர் நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்டால், ஈரானிய...

எரிவாயு விநியோக சிக்கல் விரைவில் தீருமாம்!

நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நுகர்வோர், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மீண்டும்...

வாகன விளம்பர மோசடி செய்த இளைஞன் கைது!

ஹோமாகம, மவத்தகம பகுதியில், வாகனங்களை இணையத்தில் விளம்பரப்படுத்துவதாகக் கூறி, மக்களிடமிருந்து பணத்தைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்