5 உயிர்களை பலி கொண்ட இராகலை தீ விபத்திற்கு பெற்றோல் பயன்படுத்தப்பட்டது!

Date:

ஐந்து உயிர்களைக் காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவத்துக்கு, பெற்றோல் பயன்படுத்தப்பட்டுள்ளது என அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலப்பனை நீதிமன்றத்தில் நேற்று (08) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இராகலை பொலிஸார், மேற்படி இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இராகலை தோட்டம் இலக்கம் 1, மத்திய பிரிவு தோட்டத்தில், கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி, இரவு தீ விபத்து சம்பவம் இடம்பெற்றது. தனி வீடொன்று தீப்பற்றியது. இதில் வயோதிக தம்பதியர், அவர்களின் மகள், அவரது இரண்டு பிள்ளைகள் தீயில் கருகி மடிந்தனர்.

வயோதிப தம்பதியின் மகனான தங்கையா இரவீந்திரன் (27) என்பவர் உயிர் தப்பியிருந்தார்.

சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், மேலதிக ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட
நீதவான், வழக்கு விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு
ஒத்திவைத்தார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்