சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா சுந்தர். தற்போது திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தனது வருங்கால கணவருக்கு தன்னை விட ஒரு வயது குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த கேள்விக்கு அவர் விளக்கமளித்தபோது, “பெண்ணை விட பையனுக்கு வயது அதிகம் ஆக இருக்க வேண்டும் என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை ஒரு பிரச்சினை கிடையாது, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மரியாதையுடன் இருக்க வேண்டும் அவ்வளவு தான்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மாளவிகா சுந்தர் தனது வருங்கால கணவருக்கு லிப்கிஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து ‘33 வயதில் சரியான ஒரு நபரை தேர்வு செய்துள்ளேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.




