அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா தான் நடித்த படத்தின் விழாவில் தனது காதலிக்கு புரபோஸ் செய்து அசத்தி இருக்கிறார்.
நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்து இருப்பவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா.
கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி கார்த்திகேயாவுக்கும் லோகிதா ரெட்டி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் கார்த்திகேயா ‘ராஜா விக்ரமார்கா’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் விழா நடந்தது. இந்த விழாவின் போது படக்குழுவினர் முன்னிலையில் கார்த்திகேயா தனது காதலிக்கு முழங்காலிட்டு மலர் கொடுத்து புரபோஸ் செய்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தங்களது திருமணம் நவம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




