தரம் 6- 9 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பது பற்றி 2 வாரங்களில் முடிவு!

Date:

6 முதல் 9ஆம் தரம் வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பிரேமஜயந்த, நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதாக தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகள் பச்சை சமிக்ஞை காண்பித்த பிறகு, 200 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பாடசாலைகளையும் வகுப்புகளையும் மீண்டும் திறக்கப்பட்டதாக கூறினார்.

10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அடுத்த வாரம் மற்ற தரங்களுக்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான விவாதங்களை நடத்துவோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், கல்வி வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கும் அனுமதி வழங்க முடியும் என்றார்.

உயர்தர மாணவர்களுக்கான கல்வி வகுப்புகளை உடனடியாக நடத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்