தனி தீவாக துண்டிக்கப்படும் நிலையில் கிளிநொச்சி கிராமம்: காப்பாற்றக் கோரும் மக்கள்!

Date:

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்று புலம் பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.

வள்ளுவர் பண்ணையையும், நாவலர் பண்ணையையும் இணைக்கும் வீதியில் அமைந்துள்ள பாலத்தின் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த வீதி ஊடான வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பதிலாக அமைக்கப்பட்ட வீதிக்கு மேலாக குளத்து நீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவையின் நிமித்தம் செல்பவர்கள், தொழிலிற்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நோயாளர்களை அழைத்து செல்வதிலும், மாணவர்கள் பாடசாலை செல்வதிலும் பாரிய சவால் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாகனங்களை மறுபுறத்தில் நிறுத்திவிட்டு நோயாளர்களை தூக்கியே கடக்க வேண்டிய நிலை தற்போது உள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்தால் முற்றாக போக்குவரத்து தடைப்பட்டு 90 குடும்பங்களும் தனியாக நீரில் சூழ்ந்த பிரதேசத்தில் சிக்கிக்கொள்ளும் அபாய நிலை காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த வீதியானது புதுமுறிப்பு குளத்தின் அலைகரை பகுதியை ஊடறுத்து செய்வதால், தொடர்ந்தும் இந்த நிலை காணப்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது 19 அடி கொள்ளவு கொண்ட புதுமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் 16 அடி 1 அங்குலமாக காணப்படுகின்றது. தொடர்ந்தும் நீர் வருகை காணப்படுவதால் நீர்மட்டம் அதிகரித்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாய நிலை காணப்படுவதுடன், மக்கள் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்படும்.

இந்த நிலையில், உடனடியாக மாற்று நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு மக்கள் கோருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்