பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய மனைவி மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த கணவன்!

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடிய மனைவி மீது கணவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் அருகிலுள்ள கிராமத்தில் இந்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

இஷான் மியான்- ரபியா ஷம்சிக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் திகதி ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, பாகிஸ்தான் வென்றது. பாகிஸ்தானின் இந்த வெற்றி தொடர்பான புகைப்படத்தை தனது செல்போன் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வைத்துக் கொண்டாடியுள்ளார் ரபியா ஷம்சி.

இதையடுத்து மனைவி மீது கஞ்ச் நகர் போலீஸில் இஷான் மியான்புகார் கொடுத்தார். பாகிஸ்தான் அணியை வெற்றியைக் கொண்டாடிய தனது மனைவி ரபியா மீது வழக்கு தொடரவேண்டும் என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் வென்றார்கள், இந்துக்கள் தோற்றார்கள் என்று ஸ்டேட்டஸ் போட்டதாகவும், தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் ஜெயித்தார்கள் என்றும் பதிவிட்டதாக கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை அவரது மாமியார் பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும் அவர் கூறினார்.

அவர் தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் பிற தொழிற்சாலை ஊழியர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் பார்ப்பதாகவும், மனைவி வகுப்புவாத மற்றும் தேச விரோத இயல்புடையதாக அப்டேற் செய்ததால், அது தன்னை சங்கடப்படுத்தியதாக அவர் கூறினார்.

மேலும் செல்போன் ஸ்டேட்டஸின் ஸ்கிரீன்ஷொட்களையும் அவர் பொலிஸ் எஸ்.பி.க்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து ரபியா ஷம்சி மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் போலீஸ் நிலையத்தில் இஷான் மியான் புகார் கொடுத்தபோது அதை போலீஸ் அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து போலீஸ் எஸ்.பி. அங்கித் மிட்டலின் உதவியை இஷான் நாடியுள்ளார். அதன் பின்னரே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று கூறும் ரபியா, பாகிஸ்தான் அணியின் வெற்றி புகைப்படங்களை தனது உறவினர்கள்தான் செல்போனில் பதிவேற்றியுள்ளனர் என்றும், தனக்கு இதுகுறித்து எதுவும்தெரியாது என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே ரபியா ஷம்சி விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் எஸ்.பி.அங்கித் மிட்டல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த  ஜோடி திருமணமான உடனேயே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ரபியா தனது தாயாரின் வீட்டில் வாழ்கிறார். இஷான் மியன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அவர் பிறந்த வீட்டுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இஷான் மியன் மீது ரபியா வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு பழிவாங்கவே, ரபியா மீது கணவன் இந்த வழக்கை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என தன்னைக் கூறிக்கொள்ளும் இந்தியாவில், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பலர் கைது செய்யப்பட்ட கொடூர சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்