சண்டையை விலக்கச் சென்ற பெண் பொல்லால் அடித்து கொலை: வட்டவளையில் சம்பவம்

Date:

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று (04) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அயல் குடும்பத்திற்கு, தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட கைகலப்பை விளக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு இறந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அட்டன் நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

நடிகை நயன்தாராவின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தயாரிப்புகள் இலங்கை வர்த்தகச் சந்தையில் கால் பதிக்கிறது

இந்தியாவில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரத் தயாரிப்புகளான ‘Femi9’, ‘Lumi9’ மற்றும் குழந்தைகளுக்கான...

மீன்களின் உயிரிழப்பை விசாரிக்க உத்தரவிட்ட மீன்பிடி அமைச்சர்

கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த...

விஜய் புகழ்பாடிய பாடகர்கள் மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைப்பு

சூரசம்ஹாரம் விழாவில் முதல்வருக்கு அரோகரா கோஷம் எழுப்பிய பாடகர்கள் மீது நடவடிக்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்