மொன்டெரோ வாகனம் ஒன்றுவேவகக்கட்டுப்பாட்டை இழந்து கார், முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மொன்டெரோ வாகனத்தை 16 வயது மாணவன் ஒருவர் ஓட்டிச் சென்றார்.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி, குறித்த சிறுவனால் செலுத்தப்பட்ட அதிசொகுசு வாகனம், வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த கார், ஓட்டோ மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
1
+1