24.7 C
Jaffna
January 28, 2025
Pagetamil
கிழக்கு

நோயாளர் காவு வண்டி- கார் நேரடி மோதல்!

புல்மோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த நோயாளர் காவு வண்டி இன்று அதிகாலை நிலாவெளி பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக நிலாவெளி பொலிசார் தெரிவித்தனர்

இன்று அதிகாலை புல்மோட்டை தள வைத்தியசாலையிலிருந்து திருமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளரை கொண்டுசென்ற நோயாளர் காவு வண்டியுடன் எதிரே அதி வேகத்துடன் வந்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, நேருக்குநேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நிலாவெளி பொலிசார் தெரிவித்தனர்

இவ்விபத்தில் நோயாளர் காவு வண்டி சாரதி, சுகாதார உத்தியோகத்தர், பணியாளர் மற்றும் நோயாளி உள்ளிட்டவர்கள் அதிஷ்டவசமாக எதுவித ஆபத்துக்களும் இன்றி உயிர்தப்பியதுடன் காரின் சாரதி பலத்த காயத்திற்குள்ளாகி சிகிச்சைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்ததுடன்.

மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

east tamil

மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேகம்

east tamil

இலங்கைத்துறை முகத்துவாரத்தில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

east tamil

மாடு மேய்க்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

Pagetamil

ஆளுநர் புல்மோட்டைக்கு திடீர் விஜயம்

east tamil

Leave a Comment