கனகராயன்குளத்தில் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரம் – ஹயஸ் வாகனம் மோதி விபத்து!

Date:

கனகராயன்குளம் பகுதியில் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரமும், ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளதாக கனராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (27) இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் உழவு இயந்திரம் கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஏ9 வீதியில் புளிங்குளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது அதே வீதி வழியாக வந்த ஹயஸ் ரக வாகனம் கனராயன்குளம் பகுதியில் வைத்து கழிவகற்றும் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தையடுத்து ஹயஸ் ரக வாகனம் வீதியை விட்டு விலகி தடம் புரண்டதுடன், கழிவகற்றும் உழவு இயந்திரமும் கடும் சேதத்திற்கு உள்ளாகியது. குறித்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்த 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவ் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்