Pagetamil
இலங்கை

புலிகளின் பெயரைக்கூறி மீண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கொல்லப்போகிறார்களா?: முன்னாள் எம்.பி அரியம் கேள்வி!

புலிகள் என தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி 2004, ம் ஆண்டு தமிழ்தேசிய்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் படு கொலை செய்யப்பட்ட்நிலமையை மீண்டும் உருவாக்க போகிறார்களா? அல்லது சிறையில் அடைக்கப்போகிறார்களா? புலிகளின் பெயரை உச்சரிக்காமல் இனவாத ஆட்சியை கொண்டு செல்ல்முடியாது எனவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சில சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை புலிகள் (கொட்டியா) என கூறிய கருத்து தொடர்பாக மேலும் கருத்து கூறுகையில்.

கடந்த 2004.ம் ஆண்டு 22,தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக நாம் இருந்தவேளையில் அப்போது இருந்த ஏனய சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு பாராளுமன்ற விவாதங்களிலும் நாம் உரையாற்றும்போது தொடர்ந்து எம்மை பார்த்து புலிகள் என முத்திரை குத்தி அமர்வு வேளைகளில் எம்மை குழப்பியவரலாறுகள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமே உண்டு.

அப்படி அவர்கள் கதைக்கிறார்கள் என நாம் கவலை கொள்ளவில்லை எமது உண்மையான வடக்கு கிழக்கு தாயகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளை எல்லாம் ஆதாரங்களுடன் முன்வைக்கும் போதெல்லாம் நாம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் தரமுடியாத இனவாதிகள் எம்மை பார்த்து புலிகள் என்று கூறிய பல வரலாறுகள் பல உண்டு.

அப்படி கூறியது ஒருபக்கம் இருந்தாலும் எமது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களான மாமனிதர்களான மட்டக்களப்பு ஜோசப்பரராசசிங்கம், யாழ்ப்பாணம் ரவிராஜ், மற்றும் சிவனேசன் ஆகியோர் 2004, தொடக்கம் 2009, வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, கொழும்பு தலைநகர், வன்னி ஆகிய இடங்களில் படுகொலைசெய்யப்பட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களை விட அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பிராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு, பிரதேச சபை உறுப்பினர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு பற்றாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்களை புலிகள் முத்திரை குத்தப்பட்டு்படுகொலை செய்யப்பட்ட ஒரே கட்சி என்றால் அது்தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமே.

இவைகளை விடவும் 22, தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை்புலிகள் முத்திரை குத்தப்பட்டு வடக்கு கிழக்கு்மாகாணங்களில் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு்செல்ல்முடியாமல் அவர்களின் உறவினர்களை கடத்தி 2006, வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தடுத்த வரலாறுகளும் இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் தமிழ் தேசிய்கூட்டமைப்புக்கு மட்டுமே உண்டு.

தமிழ்தேசிய கூட்டமைப்பு சோரம் போகாகமல் நேர்மையாக உறுதியுடனும் உண்மையுடனும் செயல்படும்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புகள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்,திட்டமிட்ட கைதுகள் பயங்கரவாத தடைச்சட்டமூலம் பாதிப்புறும் தமிழ் மக்கள், காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதி விடயங்களை சுட்டிக்காட்டும் போது புலிகள் என எமக்கு விரல் நீட்டி கேலிசெய்வது்2004 தொடக்கம் 2015, வரை மிக அதிகமாக இருந்தது.

ஆனால் 2015, தொடக்கம் 2020, வரை ஐந்து வருடங்கள் நல்லாட்சி அரசில் இவ்வாறு புலி்முத்திரை எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குத்தப்படவில்லை ஏனெனில் நல்லாட்சி அரசில் எதிர்கட்சியாக இருந்தாலும் ஆளும் தரப்புடன் இணைந்து சில அபிவிருத்தி வேலைகளை செய்தமையால் இனவாதம் உள்ளே இருந்தாலும் வெளியில் பகிரங்கமாக காட்டப்படவில்லை என்பது உண்மைமட்டுமல்ல உயிர்நீத்த உறவுகள், மாவீரர் நினைவுகள், படுகொலை நினைவுகள், முள்ளிவாய்க்கால் நினைவுகள் எல்லாம் தடைகள் இன்றி செய்யக்கூடிய சூழல்களும் இருந்தன.

ஆனால் 2020 தற்போதய ஜனாதிபதி கோட்டபாய பதவி ஏற்று அதன்பின்னர
இடம்பெற்ற பொதுத்தேர்தல் புதிய அரசு உருவாக்கப்பட்ட பின்னர் மீண்டும் இனவாதப் பேச்சுகளும் தமிழ்தேசிய்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை புலிகள் என முத்திரை குத்துவதும் தொடர்கிறது.

இந்த ஆட்சியாளர்களின் இனத்துவேசத்தை்சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருடிய இடங்களில் “BATMAN” என எழுதி வைத்த திருடன் சிக்கியது எப்படி?

Pagetamil

இள வயது பெண்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு: சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

east tamil

ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது

east tamil

வவுனியாவில் ஒருவர் கொலை

Pagetamil

TikTok ஊடாக காதலித்த காதலியை தேடி வந்த இளைஞர்: பொலிஸாரால் கைது

east tamil

Leave a Comment