27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

வடக்கில் 16,17 வயது பாடசாலை மாணவர்களுக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம்

கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும்
பைஸர் கோவிட்-19 தடுப்பூசியானது நாடளாவியரீதியில் ஓக்டோபர் மாதம் 21ஆம்
திகதி வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டுவருகிறது.

அந்தவகையில் அடுத்தகட்டமாக வட மாகாணத்தில் 16, 17 வயதுடைய பாடசாலை
மாணவர்களுக்கு பைஸர் கோவிட்-19 தடுப்பூசியானது ஒருதடவை மாத்திரம்
எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது.
மேலும் பாடசாலையைவிட்டு விலகிய 16 தொடக்கம் 19 வயதுடையவர்களுக்கு
அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் சனிக்கிழமைகளில்
இத்தடுப்பூசியானது வழங்கப்படும்.

இத்தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு 16 தொடக்கம் 19 வயதுடைய அனைவரும்
தமது தேசிய அடையாள அட்டையினை அன்றையதினத்தில் தமது சுகாதார வைத்திய
அதிகாரி பணிமனையில் சமர்ப்பித்து தமது வயதினை உறுதிப்படுத்திக்கொள்வது
அவசியமாகும்.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி
வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை,
சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் பிரதி
சனிக்கிழமைகளில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதார வைத்திய
அதிகாரி பணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக
சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுகாதார
வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட
வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக
பெற்றுக்கொள்ள முடியும்.

வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,
வடமாகாணம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment