26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

பணிப்பெண்கள் என்ற பெயரில் ஓமான் சுல்தான்களிற்கு இலங்கை யுவதிகளை விற்ற பெண் கைது!

ஓமானில் வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி, பெண்களை ஏமாற்றி, பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளிற்கு பணிப்பெண்களாக சென்று, அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பின்னரர் பெப்ரவரி மாதத்தில் நாட்டுக்குத் திரும்பிய பெண்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மஹியங்கணையில் வசிப்பவர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரும் மற்றொரு குழுவும் மனித கடத்தல் வலையமைப்பை நடத்தி 22 முதல் 27 வயதுக்குட்பட்ட பெண்களை ஓமானுக்கு அனுப்பி சுல்தான்களுக்கு விற்றனர் என்பது தெரியவந்தது.

சிஐடிக்கும் மோசடி தொடர்பாக புகார்கள் செய்யப்பட்டிருந்ததாக வெளிநாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் பெப்ரவரி 25ஆம் திகதி ஓமானில் இருந்து இலங்கைக்கு வந்து 14 நாட்கள் வவுனியாவிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்க வைக்கப்பட்டார்.

தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தெஹியத்தக்கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, மார்ச் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment