நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புவியீர்ப்பு ஏவுகணையைச் சோதித்த வடகொரியா

Date:

வடகொரியா, நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புவியீர்ப்பு ஏவுகணையைச் சோதித்திருப்பதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் KCNA தெரிவித்தது.

2016இல் சோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புதிய சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அது குறிப்பிட்டது.

இதற்கு முன்னதாக செலுத்தப்பட்ட ஏவுகணைகளை விடவும் புதிய வகை மெல்லியதாக இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, இன்னும் கூடுதலான, குறுகிய இலக்கு கொண்ட ஏவுகணைகளை ஒரே நீர்மூழ்கிக் கப்பலில் வைத்திருக்கும் வசதி செய்யப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ஏவுகணைச் சோதனையில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்