இஸ்ரேலில் டெல்ட்டா வகை வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
AY 4.2 திரிபு, ஐரோப்பாவில் சில நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஐரோப்பாவிலிருந்து அங்குச் சென்ற 11 வயதுச் சிறுவன், இந்த திரிபை முதன்முதலில் இஸ்ரேலுக்குள் கொண்டு சென்றதாக நம்பப்படுகிறது.
சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை அமைச்சு உறுதிசெய்தது.
மற்ற கொரோனா வைரஸ் திரிபுகளைப் போல் அதிவேகத்தில் பரவுவது, உடலில் அதிகப் பாதிப்பு ஏற்படுத்துவது போன்றவற்றை AY 4.2 திரிபு செய்யாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.



