புகையிரத சேவைகளை எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் ஆரம்பிப்பதற்கான ஊழியர்களின் அழைப்பு இன்று முற்பகல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை புகையிரதங்கள் இயங்காது என்று புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர இன்று (19) தெரிவித்தார்.
புகையிரத சேவைகளை வியாழக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தாலும், மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை புகையிரத இயக்கப்படாது என்று முக்கிய செயற்பாட்டுக் குழுவான புகையிரத நிலைய அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்த இரத்துக்கான காரணம் உடல்நலப் பிரச்சினைகளா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிவித்தார்.
புகையிரத நிலையங்களின் முன்னணி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஊழியர்கள், இன்று பிற்பகல் முதல் கடமைக்குத் திரும்பவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் ஊழியர்களுக்கான அழைப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.