25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

யாழ் மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு தொற்று!

யாழ் மாவட்டத்தில் நேற்று 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அன்டிஜன் சோதனைகளில் 22 பேரும், பிசிஆர் சோதனையில் 9 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

அன்டிஜன் சோதனையில், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 27 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 9 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

நேற்று 319 பேரின் மாதிரிகள், யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டது.

இதில், யாழ் மாவட்டத்தில்- தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  2 பேர் என- 9 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியா மற்றும் மன்னாரை சேர்ந்த இருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதுதவிர, வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவர், பூவரசங்குளம் மாவட்ட வைத்தியசாலையில்  2 பேர், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment