24.4 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

யாழ் மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு தொற்று!

யாழ் மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பிசிஆர் சோதனைகளில் 7 பேரும், துரித அன்டிஜன் சோதனைகளில் 18 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கு தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 2 வயதான பெண் குழந்தையும் உள்ளடங்குகிறது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 பேர், பலாலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் என யாழ் மாவட்டத்தில் 7 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

இதுதவிர, யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனைகளில் 18 பேருக்கு தொற்று உறுதியானது.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் (அச்சுவேலி தெற்கை சேர்ந்த 1 மாத வயதுடைய பெண் குழந்தையும் உள்ளடக்கம்), மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் என 18 பேருக்கு தொற்று உறுதியானது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் நேற்று 28 பேருக்கு தொற்று உறுதியானது.

யாழ் மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதியானது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 2 பேர் (உயிரிழந்த 79 வயது பெண் உள்ளடங்கலாக), ஒட்டுசுட்டான் பொது வைத்தியசாலையில் ஒருவர் என, 6 பேருக்கு தொற்று உறுதியானது.

வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவர் என, 8 பேருக்கு தொற்று உறுதியானது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

மன்னார் பொது வைத்தியசாலையில் 6 பேருக்கு தொற்று உறுதியானது. (12 வயது சிறுவன், 18, 20 வயதான யுவதிகளும் உள்ளடக்கம்)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

Leave a Comment