ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 வது வருடாந்த கூட்டம் அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறும்.
2022 மார்ச் 2 முதல் 5 வரை இந்த கூட்டம் நடைபெறும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
கூட்டத்தில் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுனர்கள், சர்வதேச வங்கி பிரதிநிதிகள், நிறுவன நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட உறுப்பு நாடுகளின் 3,000-5,000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
‘கோவிட் -19 க்குப் பிந்தைய உலகத்திற்கான காலநிலை-நெகிழ்வான பசுமை பொருளாதாரத்தை நிலைநிறுத்துதல்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.




