வடக்கில் திடீர் அறிவிப்புடன் ஆரம்பிக்கவுள்ள 680 பாடசாலைகள்: ஆளுநர் சறோஜினிதேவி தகவல்!

Date:

வட மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகள் உள்ளன. அவற்றை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாகாணத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் ஆசிரியர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சரிடம் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய போக்குவரத்து அமைச்சருடன் பேசி அதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறையின் கீழ் தமது பயணத்தை முன்னெடுக்க முடியும்.

மேலும் ஆசிரியர்களுக்கு அவசர சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க பயிற்சியளிக்க மாகாண சபையின் நிதியில் சுகாதாரத் திணைக்களத்தை முன்னெடுக்க என்னால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஒட்சி மீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களை பெற்று ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் வழங்க அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன்.

எனவே அனைத்து ஒழுங்குகளும் முடிவடையும் நிலையில் உள்ள நிலையில் ஆரம்ப பாடசாலைகள் திடீர் அறிவிப்புடன் ஆரம்பிக்கப்படும் என்றார்.

இதேவேளை தென் மாகாணத்திலுள்ள 200 மாணவர்களுக்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலைகள் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்