பொகவந்தலாவை- ஹட்டன் பிரதான வீதியில் டியன்சின் நகரில், மதுபோதையிலிருந்த
இளைஞர்களால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் கம்பி எண்ணி வருகிறார்கள்.
தாக்குதலில் காயமடைந்த 27 வயதான சாரதி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தோட்டப்புறங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்களை விநியோகித்து வரும் சாரதி, கடந்த 26ஆம் திகதி தாக்குதலிற்குள்ளானார்.
சம்பவ தினத்திலன்று, தனது லொறியில் இவர் பயணித்துக் கொண்டிருந்த போது, டியன்சின் நகரில், நடு வீதியில் தள்ளாடியபடி இளைஞர் குழுவொன்று சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது, சாரதி வாகன ஹோர்னை அடித்துள்ளார்.
“எமக்கே ஹோர்ன் அடிக்கிறாயா?“ என கேட்டு, சாரதியுடன் முரண்பட்ட இளைஞர்கள், அவரை தாக்க, அவரிடமிருந்த 70,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டனர்.
பாதிக்கப்பட்ட இளைஞன் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் கைதாகினர்.




