மன்னார் பிரதேசசபை புதிய தவிசாளர் தெரிவிற்கு எதிராக மனு!

Date:

வடமாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், இன்று (28), கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நாளை (29) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாளை இடம்பெறவுள்ள புதிய தவிசாளருக்கான தெரிவினை இடை நிறுத்தக் கோரியும், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், அவற்றுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு குறித்த ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.

முன்னாள் தவிசாளர் முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், சந்தீப் கம்மதிகே ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, நாளை (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்