அம்பாறையில் திடீர் காற்று, மழை!

Date:

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடீரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.

இன்று திடீரென அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை,  நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று பகுதிகளில் கடும் மழையுடன் காற்று வீசியது. இதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

சில இடங்களில் புழுதியுடன் கூடிய காற்று வீசியதுடன் விளம்பர பலகைகளும் சேதமடைந்தன.கடற்கரையோரங்களில் உள்ள தென்னைமரங்கள் அகோர காற்றினால் ஓலைகளை இழந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்