25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இலங்கை

வவுனியாவில் 69 பேருக்கு தொற்று… 4 பேர் மரணம்!

வவுனியாவில் மேலும் 69 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 4 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (22) காலை வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 69 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் நேற்று 4பேர் மரணமடைந்துள்ளனர். நெடுங்கேணி பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 39), பட்டக்காடு பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 49), பம்பைமடு காப்பகம் ஒன்றில் ஆண் ஒருவரும் (வயது 79), உக்குளாங்குளம் பகுதியில் பெண் ஒருவரும் (வயது 71) என 4 பேர் மரணமடைந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வனவளத் திணைக்களம் மக்களிடமிருந்து திருடிய காணிகளை விடுவிக்க வேண்டும் – ரவிகரன்

east tamil

சஜித் பிரேமதாச மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையே முக்கிய சந்திப்பு

east tamil

வாழைச்சேனை காகித தொழிற்சாலை மீண்டும் செயல்பட தொடங்கும் – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

east tamil

சாலை விதியை மீறிய பஸ் ஓட்டம் – விபத்தில் 11 பேர் காயம்

east tamil

மல்லாவியில் தீவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

Pagetamil

Leave a Comment