யாழில் கணவனை திருகுவளையால் அடித்துக் கொன்ற மனைவி கைது!

Date:

யாழ்ப்பாணம், அரியாலையில் தனது கணவனை திருகுவளையால் அடித்துக் கொன்ற மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார், 3ஆம் குறுக்குதெருவில் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் துரைராசா செல்வராசா (32) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த அவர், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் முடித்து பூம்புகாரில் வசித்து வருகிறார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்தனர்.

25 வயதான குடும்பப் பெண் கைது செய்யப்பட்டார்.

திருகுவளையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத் தலைவரின் உடலில் 5 இற்கு மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு

தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு...

“நம்மைவிட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே தவெக கூடுதலாக பெற்றுள்ளது” – மு.க.ஸ்டாலின்

‘கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம்...

மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்