தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே உறங்கும் விசித்திர இளைஞன்!

Date:

கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே துாங்கும் இளைஞர் ஜப்பானில் வசித்து வருகிறார்.

ஜப்பானைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி, வயது 36. இவர் ‘ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோஸியேஷன்’ தலைவராக பதவி வகிக்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் உறங்குகிறாராம். இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி கூறுகிறார்.

துாங்கும் நேரத்தை எப்படி குறைப்பது என்பது குறித்து நுாற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்தும் வருகிறாராம். இதுகுறித்து தைசுகே ஹோரி கூறியதாவது:

எல்லாரையும் போல நானும் எட்டு மணி நேரம் தான் துாங்கிக் கொண்டு இருந்தேன். ஆனால் பல வேலைகள் பாதித்தன. எனவே துாங்கும் நேரத்தை குறைக்க துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே துாங்குகிறேன். சில நாட்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட துாங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்