குழந்தைப் பருவத்தில் காணாமல் போனவர் 14 வருடங்களின் பின் பேஸ்புக்கின் உதவியுடன் தாயாரை கண்டடைந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Date:

காணாமல் போன பெண் குழந்தை, கிட்டத்தட்ட 14 வருடங்களின் பின்னர் பேஸ்புக்கின் உதவியுடன் தனது தாயாரை கண்டடைந்த நெகிழ்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஏஞ்சலினா வென்செஸ். இவருக் கும், இவரது கணவர் பாப்லோ ஹெர்னான்டஸுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் 22 டிசம்பர், 2007 அன்று கிளர்மான்ட்டில் உள்ள  வீட்டிலிருந்து ஜாக்குலினை கடத்திச் சென்றார். அப்போது ஜாக்குலினிக்கு 5 வயது.

இதைத் தொடர்ந்து, தாயார் பொலிஸ் முறைப்பாடு செய்தார்.  பொலிசார் விசாரணை நடத்தினர். ஆனால், தந்தையும் மகளும் புளோரிடாவிலிருந்து வெளியேறி, மெக்சிகோவுக்குச் சென்று விட்டதாக அதிகாரிகள் சந்தேகித்ததால், வழக்கு கிட்டத்தட்ட மூடப்பட்டது.

தனது தந்தையுடன் மெக்சிக்கோவில் வசித்து வந்த ஜாக்குலின், பாடசாலைக் கல்வியை முடித்து, உயர் கல்விக்கு செல்லும் 19 வயது இளம்பெண்ணாக மாறினார்.

தனது தாயாரை பார்க்க வேண்டும் என ஜாக்குலின் பல முறை வலியுறுத்தியும் அவரது தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் பேஸ்புக்கில் தனது தாயாரின் பெயரான ஏஞ்சலினா வென்செஸ் என்பதை பதிவிட்டு ஜாக்குலின் தேடிய போது, பலரின் முகங்கள் வந்திருக்கின்றன.

அவர்களுடன் பேசி, தனது தாயார் ஏஞ்சலினாவை கண்டுபிடித்தார்.

அதன் பின்னர், கடந்த 13ஆம் திகதி டெக்சாஸுக்கு வந்து தனது தாயாரை சந்தித்தார்.

பொலிசார் ஆவணங்களை சரிபார்த்து, மெக்சிகோவிலிருந்து வந்தது காணாமல் போன ஜாக்குலின்தான் என உறுதி செய்தனர்.

கிளர்மான்ட் பொலிசார் இந்த பதிவை தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டதை தொடர்ந்து, ஏராளமானவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை...

“தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்