வவுனியாவில் தேங்கியுள்ள சடலங்கள்!

Date:

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்த 22 பேரின் சடலங்கள் தற்போது தேங்கி உள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளதுடன், இறப்புக்களும் அதிகரித்து வருகின்றது. கோவிட் தொற்று காரணமாக மரணமடைபவர்களின் உடல்கள் சுகாதார நடைமுறைகளுடன் வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்திலேயே தகனம் செய்யப்பட்டு வருகின்றது.

குறித்த மின் மாயானமானது கடந்த நான்கு தினங்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதன் திருத்த வேலைக்குரியவர்கள் கொழும்பில் இருந்து வருவதனால் தாமத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்நறது. இருப்பினும் திருத்த வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கோவிட் தொற்றால் மரணமடைநச்த 4 பேரின் சடலங்கள் அடக்கம் செய்வதற்காக நேற்று (16.09) ஒட்டமாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தவர்கள் உட்பட 22 பேரின் சடலங்கள் தற்போது தகனம் செய்யப்படாத நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (17) இரண்டு சடலங்கள் தகனத்திற்காக கெக்கிராவ அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஏனைய சடலங்கள் தேக்க நிலையில் உள்ளன. மின் மாயானம் திருத்தப்பட்டாலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 சடலங்களையே எரியூட்ட முடியும். குறித்த சடலங்களை முழுமையாக தகனம் செய்ய ஐந்து தினங்கள் தேவையாகவுள்ள நிலையில் தொடர்ந்தும் இறப்புக்கள் ஏற்பட்டால் தகனம் செய்வதில் மேலும் நெருக்கடி நிலை ஏற்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாவட்டத்தின் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் கோவிட் தொற்றில் இருந்து விடபட சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதுடன், அரசாங்கத்தினதும், சுகாதரப் பிரிவினரதும் கோவிட் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்