28.9 C
Jaffna
March 4, 2025
Pagetamil
இலங்கை

அநுராதபுரத்தில் மிரட்டப்பட்ட தமிழ் அரசியல்கைதிகளை பார்வையிட த.தே.த.முன்னணிக்கு அனுமதி மறுப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக, இன்று (16) காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சென்ற நிலையில், அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

அநுராரபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 12ஆம் திகதியன்று சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சரினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, முழந்தாளிட வைக்கப்பட்டது.

அவர்களை பார்வையிட இன்று காலை அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சென்றனர்.

‘கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் அனுமதிக்க முடியாது என்றும் அவ்வாறு அனுமதிப்பதாக இருந்தால் கொழும்பில் இருக்கும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சிடம் அனுமதி பெற்று, தங்களுக்கு அறிவித்தல் கிடைத்தால் மாத்திரமே அனுமதிப்கோம் என, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்’ என, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

இதையடுத்து, இராஜாயங்க அமைச்சின் செயலாளாருக்கு தொடர்பை ஏற்படுத்தியும் எந்த பதிலும் இல்லாத நிலையில், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

‘தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களிடம் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் சிறையில் உள்ள அவர்களின் நலன்களை பார்ப்பதற்கு சட்டத்தரணி என்றவகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் எங்களை ஈடுபடுத்த சொல்லி கேட்டுள்ளார்கள்.

‘இதில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் நீதி நியாயம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். நாங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை எடுப்போம்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment