ஏட்டிக்குப் போட்டியான ஏவுகணை சோதனைகள்: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

Date:

கொரியத் தீபகற்பத்தில் ஏட்டிக்குப் போட்டியான ஏவுகணை பரிசோதனைகளால் பதற்றம் அதிகரித்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புவி ஈர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாகப் பாய்ச்சி சோதித்துள்ளதாகத் தென்கொரியா தெரிவித்துள்ளது.

கிழக்குக் கடற்பகுதியில் வடகொரியா 2 புவி ஈர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சிய சில மணிநேரத்தில் அந்தச் சோதனையை தென்கொரியா நடத்தியது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் இரு கொரியாக்களும் அந்தச் சோதனைகளை நடத்தியுள்ளன.

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலைப்பதற்குச் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாய்த் தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு கொரியாக்களையும் நிதானமாக நடக்க சீன வெளியுறவு அமைச்சர் கேட்டுக் கொண்டதுடன், பேச்சுக்கள் மூலம் பிரச்சனைகளை தீர்க்கலாமென நம்பிக்கை வெளியிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது....

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்