கொரோனா தொற்றுக்குள்ளானதாக நினைத்து உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

Date:

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகித்து, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொழும்பு – முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில், பயிற்சிக்கால பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையாற்றிய 24 வயதுடைய பதுளை – ராகல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தனக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக எண்ணுவதாகவும், அதனால் தன்னுடன் ஒன்றாக பழகும் ஏனைய பொலிஸ் நண்பர்களுக்கும் அது தொற்றலாம் என நினைப்பதால் இந்த முடிவை எடுப்பதாக கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு அவர் தான் உயிரை மாய்த்துக்கண்டுள்ளார்.

முகத்துவாரம் பொலிஸ் நிலைய தங்குமிட, கழிவறையில் தனது போர்வையை உபயோகித்து நேற்று மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த மார்ச் 15 ஆம் திகதியே, பொலிஸ் கல்லூரியில் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதுடன் கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதியே முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்