கொரோனா மரணங்கள்: வவுனியா 16, யாழ்ப்பாணம் 10

Date:

வவுனியாவில் சடுதியாக அதிகரித்த கோவிட் மரணங்கள்; 16 பேர் மரணம

நேற்று (7) வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக 16 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 10 மரணங்கள் பதிவாகின.

வவுனியாவில், கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 16 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

நாள் ஒன்றில் வடக்கில் உள்ள மாவட்டம் ஒன்றில் பதிவாகிய அதிகபட்ச கோவிட் மரணங்கள் இதுவாகும்.

யாழ் மாவட்டத்தில் நேற்று 10 மரணங்கள் பதிவாகின. யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், சண்டிலிப்பாய், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, தெல்லிப்பளை, கோப்பாய்  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொருவர் மரணித்தனர்.
spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்